தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் - பிஜிலி ரவுண்ட்-அப்!
பட்டாசு, பலகாரம், புதுத்துணி எல்லாவற்றையும் விட தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களுக்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது! அதுவும் தல படமோ, தளபதி படமோ ரிலீஸாவதாக இருந்தால் போதும் மொத்த தமிழ்நாடும் அந்த விடியலுக்காக; First Day First Show பார்ப்பதற்காக தயாராகிவிடும். தமிழ் சினிமா கிராமங்களுக்கு எல்லாம் சென்றடைய தொடங்கிய போதில் இருந்தே ‘தீபாவளி சிறப்பு வெளியீடு’ திரைப்படம் என்னும் டிரெண்டும் பரவத் தொடங்கிவிட்டது!
2019 தீபாவளிக்கும் சில அற்புதமான திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. இதில் விஜயின் 'பிகில்', கார்த்தியின் ‘கைதி்', விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ மிகுந்த எதிர்ப்பார்ப்போடு வரவிருக்கின்றன.
பிகில்
இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் விஜய், நயன்தாரா, மேயாத மான் புகழ் ‘இந்துஜா’, டேனியல் பாலாஜி, ஜேக்கி ஷ்ராஃப், தேவதர்ஷினி, ‘96’ புகழ் வர்ஷா பொல்லம்மா என ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளம் இந்த படத்திற்காக ஒன்று கூடியிருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘கனா’ படம் தமிழ் திரையுலகின் கவனத்தை பெண்களுக்கான ஸ்போர்ட்ஸ் பக்கம் திருப்பியிருக்கிறது போல - அதைப்போலவே ‘பிகில்’ திரைப்படமும் பெண்கள் கால்பந்து குழுவை மையப்படுத்தி அமைந்து இருக்கிறது.
பிகில் மொத்த பட்ஜெட் ரூபாய் 180 கோடியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பார் என்றும், மேலும் அட்லீ படம் என்பதால் நயன்தாரா interval தாண்ட மாட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யப்படுகிறது.
கைதி
‘மாநகரம்’ என்னும் வெற்றி படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவருகிறது ‘கைதி’. சமீபத்தில் வெளியான ட்ரைலரை பார்க்கும் போது இந்த படம் ஒரு அதிரடி ஹிட்டாக இருக்கும் என்பது தெரியவருகிறது. பத்து வருடங்கள் சிறையில் இருந்த பிறகு, தப்பிக்கும் ஒரு கைதியின் பயணத்தை, அவரது மனநிலைமை, அதுவும் ஒரு போலீஸ்காரர் உடன் நடக்கும் அனுபவத்தை பதிவு செய்வதாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறைக்கு செல்ல காரணம் வேண்டுமல்லவா? FlashBack -ல் தெரியவரும் போல! சாம் சி.எஸ்ஸின் இசை படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு.
சங்கத்தமிழன்
வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜயசந்தரின் மூன்றாவது படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கிறது. விவேக்-மெர்வின் ஆகியோரின் இசை படத்திற்கு பலமாக இருக்கும்! ஆனால் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த இந்த திரைப்படம், நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.
இந்த படங்களை எல்லாம் தவிர எனை நோக்கி பாயும் தோட்டா, அடுத்த சாட்டை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, நரகாசுரன் போன்ற படங்களும் இந்த தீபாவளிக்கு முன்னோ பின்னோ வெளியாகலாம் என்று கணிக்கப்படுகிறது.
தீபாவளி ரிலீஸுக்கு திரையரங்கங்கள் எல்லாம் தயாராக தொடங்கியிருக்கும். தியேட்டர்களின் ஸ்க்ரீன்களை எல்லாம் வழிபட்டு, ஹீரோக்களின் கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் எல்லாம் செய்து தெறிக்கவிட காத்திருக்கும் ரசிகர்கள் நீங்கள் தயாராகி விட்டீர்களா? 2019 தீபாவளிக்கு பிஜிலியோடு கை கோர்த்து அதிரடி கொண்டாட்டம் போடுங்கள்! தியேட்டரில் கைதட்டல் சத்தத்தைவிட பட்டாசு சத்தத்தை உரக்க கேட்க வையுங்கள்! bijili Crackers -ல் பட்டாசுகளை வாங்கி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். இப்போதே ஆர்டர் செய்யுங்கள் @ www.bijili.in !
இனிய தீபாவளி வாழ்த்துகள் மக்களே!