எப்பொழுது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் டிவியும் கேபிளும் வந்து சேர்ந்ததோ, அப்பொழுது இருந்தே சீரியல்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன. மஹாபாரதம்,ராமாயணம் என ஆன்மீகத்தில் தொடங்கிய சீரியல் வரலாறு, அடுத்து ‘சித்தி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்று வளர்ந்தது. 'மெட்டி ஒலி' முடிந்தால்தான் ரொட்டி ஒலி கேட்டும் நிலை கூட இருந்தது! கொஞ்ச காலத்திலேயே ‘கனா காணும் காலங்கள்’ பிரபலமானது, காரணம் அதன் யதார்த்தம்.
இப்போது இந்த சீரியல் ரேசில் முன்ணணியில் இருப்பது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘லஷ்மி ஸ்டோர்ஸ்’.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். கதை என்னவோ ஏற்கனவே பலமுறை கேட்ட கதை தான். ஒரு அண்ணன், அவருக்கு பாசமோ பாசமாய் இரண்டு தம்பிகள், தம்பிகளை குழந்தைகளாக பார்த்துக் கொள்ளும் அண்ணனின் மனைவி. இந்த உறவுகள் பகிர்ந்து கொள்ளும் துக்கம், சந்தோஷம், குழப்பம் என அத்தனையையும் நம் அனுபவமாய் உணர வைப்பது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார்,குமரன் தங்கராஜன், சித்ரா, சரவண விக்ரம் ஆகிய நடிகர்கள் முன்ணணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஒவ்வொருவரும் நடிப்பில் பட்டையை கிளப்புகிறார்கள் என்று பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். ப்ரியா தம்பியின் எழுத்தில் உருவாகி வரும் இந்த சீரியல், மக்களின் வாழ்க்கையில் ஒரு பங்காகவே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தினசரி சீரியல் பார்க்காமல் தூங்க மாட்டோம் என்று கூகுள் ரிவ்யூவில் வந்து மக்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். சீரியலில் வரும் கதாபாத்திரங்களின் குணங்களை எல்லாம் ரசித்து ரசித்து பாராட்டுகிறார்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பாகிறது லஷ்மி ஸ்டோர்ஸ். இதுவும் பலமுறை பார்த்த கதைதான். சொல்லப்போனால், குஷ்பூ நடித்த ஒரு படத்தின் கதை அப்படியே லஷ்மி ஸ்டோர்ஸ் கதை போலவே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் ஒரு பெண், சொந்தமாக ஒரு துணிக்கடை வைத்து, அதில் வேலை செய்யும் ஊழியர்களை தன் குடும்பமாக நினைத்து வாழ்க்கை நடத்துகிறார். இதற்கு இடையில் வரும் சிக்கல்கள், வெற்றிகள் எல்லாவற்றையும் எப்படி பார்க்கிறார் என்னும் அனுபவத்தை நமக்கு அளிப்பது தான் லஷ்மி ஸ்டோர்ஸ். பிரபல திரைப்பட இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் சுந்தர்.சி -ன் கதையில் தான் லஷ்மி ஸ்டோர்ஸ் உருவாகியிருக்கிறது.
இரண்டு சீரியலையும் ஒப்பிட்டு எது சிறப்பான சீரியல் என்று கேட்டால் அதற்கு பதில் ரொம்பவே ஈஸியாக கிடைத்துவிடும். இரண்டு சீரியலில் முதலில் வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்னும் டைட்டிலுக்கு போட்டியாகவே ‘லஷ்மீ ஸ்டோர்ஸ்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸின் தரத்திற்கு இணையாக லஷ்மி ஸ்டோர்ஸ் இல்லை என்பது தான் உண்மை. கதை போரடிக்கிறது, வசனம் போரடிக்கிறது என்று கூகுள் ரிவ்யூக்களில் மக்கள் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தீபாவளி சீசன் வந்துகொண்டிருக்கும் வேளையில், எப்படியும் இந்த சீரியல்களில் நடிக்கும் கலைஞர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்த சேனல்கள் திட்டம் போட்டிருக்கும். நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாட போகிறீர்கள்? இந்த தீபாவளியை bijili Crackers உடன் கொண்டாடுங்கள்! நம்பமுடியாத தள்ளுபடி, அதிகபட்ச தரம் மற்றும் அதிசயிக்க வைக்கும் பரிசுப் பொருட்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. உடனே ஆர்டர் செய்யுங்கள் @ www.bijili.in !